இளையான்குடி அருகே நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்...!


இளையான்குடி அருகே நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த கார்...!
x

இளையான்குடி அருகே நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த காரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சிவகங்கை


ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அருள் ஜீவா மற்றும் கார் டிரைவர் முகமது துல்கருணை ஆகிய இருவரும் காரில் தனது நண்பரைப் பார்ப்பதற்காக அரியாண்டி புரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென காரின் பின்புறம் இருந்து புகை வந்துள்ளது.

இதனால் காரை விட்டு இறங்கி இருவரும் ஓடியுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் இடத்துக்கு விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் கார் முற்றிலும் சேதம் அடைந்தது.

தற்போது விபத்து குறித்து இளையான்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 More update

Next Story