தொழிலாளியை பேனா கத்தியால் கிழித்த உறவினர் மீது வழக்கு


தொழிலாளியை பேனா கத்தியால் கிழித்த உறவினர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளியை பேனா கத்தியால் கிழித்த உறவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள அரசமங்கலம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் சரண்ராஜ்(வயது 33). தொழிலாளியான இவருடைய தங்கை வேல்விழியை வி.அகரத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு தற்போது ஒரு வாரமாக வேல்விழி, தனது அண்ணன் சரண்ராஜ் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஜயகுமார், சரண்ராஜ் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனது மனைவி வேல்விழியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்ததற்கு சரண்ராஜ் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரமடைந்த விஜயகுமார், சரண்ராஜை திட்டி அவரது தலை, கழுத்து ஆகிய இடங்களில் பேனா கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த சரண்ராஜ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின்பேரில் விஜயகுமார் மீது வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story