வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
திசையன்விளை அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள ரம்மதபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ் திலகராஜ் மகன் கிளிண்டன் (வயது 28). இவர் ஒலிபெருக்கி மற்றும் பந்தல் அமைப்பகம் வைத்துள்ளார். இவரது ஒலிபெருக்கி கடைக்கு அருகில் நின்ற 2 வாகனங்களின் கண்ணாடியை பெட்டைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்த அசோக்குமார் (28) மதுபோதையில் உடைத்ததாக கூறப்படுகிறது. அதை தட்டிக்கேட்ட கிளிண்டனுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து கிளிண்டனின் தாயார் பூமகள் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story