9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு
9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
9-ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் அருகே குருமன்கோட்டையை சேர்ந்த ராஜி மகன் கிருஷ்ணன் (வயது 27). இவருக்கு 9-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியுடன் கடந்த ஜனவரி மாதம் அங்குள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. அந்த சிறுமி தற்போது அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி மாணவிக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து சிறுமியின் திருமணம் குறித்து ஊர் நல அலுவலர் சாந்தி அப்பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில் பள்ளி மாணவிக்கு திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக கந்திலி போலீசில் ஊர் நல அலுவலர் சாந்தி புகார் அளித்தார்.
அதன்பேரில் கந்திலி போலீசார் சிறுமியின் தாய் மீதும், சிறுமியை திருமணம் செய்த கிருஷ்ணன், அவரது தந்தை ராஜி, தாய் சுந்தரம்மாள் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.