சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு


சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் உழவர் சந்தை பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் என்ற லோகநாதன். இவர் கணவரை பிரிந்து இருந்த ஒரு பெண்ணுடன் வசித்து வருகிறாராம். இந்த நிலையில் அந்த பெண்ணின் 12 வயது மகளுக்கு மாரியப்பன் என்ற லோகநாதன் பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமேஷ்வரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story