குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி


குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி
x
தினத்தந்தி 11 Aug 2023 7:07 PM GMT (Updated: 12 Aug 2023 11:34 AM GMT)

விராலிமலை அரசு பள்ளியில் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 8 குறுவட்டங்களில் மாணவர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் இலுப்பூர் குறுவட்ட அளவிலான சதுரங்க போட்டி விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் விராலிமலை மற்றும் அன்னவாசல் ஒன்றியத்தில் உள்ள 40 அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலிருந்து 11, 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இப்போட்டியினை விராலிமலை அட்மா சேர்மன் இளங்குமரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சதுரங்க போட்டியானது 8 பிரிவுகளாக நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு பிரிவுகளில் இருந்தும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் செப்டம்பர் மாதம் 15-ந் தேதி மாவட்ட அளவில் நடைபெறும் சதுரங்க போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்தநிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மாரிக்கண்ணு, இலுப்பூர் குறுவட்ட இணை செயலாளர் நீலகண்டன், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story