தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா
தென்னை விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கும் விழா
பொள்ளாச்சி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தென்னை ஆராய்ச்சி நிலையம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக ஒருங்கிணைந்த பனைப்பயிர்கள் ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மற்றும் இடுபொருட்கள் வழங்கும் விழா, ஆனைமலை ஒன்றியத்தை சேர்ந்த வெப்பரை கிராமத்தில் நடைபெற்றது. இதற்கு தென்னை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஜே.சுரேஷ் தலைமை தாங்கி, தென்னை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள ரகங்கள் மற்றும் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி பேசினார். மேலும் தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் வாழ்வாதாரம் மேம்பட ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற தலைப்பில் மண்ணியல் மற்றும் வேளாண் வேதியல் துறையை சேர்ந்த சி.சுதாலட்சுமி, தென்னையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்து (பயிர்நோயியல்) இணை பேராசிரியர் ப.லதா, தென்னையில் பூச்சி மேலாண்மை பற்றி இணை பேராசிரியர் (வேளாண்பூச்சியியல்) இரா.அருள்பிரகாஷ், தென்னையில் உயிர் உரங்கள் பற்றி (பயிர்நோயியல்) ப.மீனா ஆகியோரும் பேசினார்கள். இதில் பங்கு பெற்ற பழங்குடி தென்னை விவசாயிகள் 40 பேருக்கு தென்னங்கன்றுகள் மற்றும் மண் புழு உரம், பேசில்லஸ், டிரைக்கோடெர்மா போன்ற உயிரி இடுப்பொருட்கள் வழங்கப்பட்டன.