வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு


வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி பறிப்பு
x

வீட்டில் இருந்த மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பொம்மனபாடி கிராமத்தில் வசித்து வருபவர் செல்லம்(வயது 75). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டிற்கு வந்த 2 மர்ம நபர்கள், ெசல்லத்திடம் நைசாக பேச்சு கொடுத்தனர்.

அப்போது அவர்கள் செல்லத்திடம் 'நீங்கள் அணிந்திருப்பது தங்க சங்கிலியா?' என்று கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த செல்லம், அந்த நபர்களின் கேள்விக்கு பதில் கூறாமல் இருந்துள்ளார்.

அப்போது அந்த நபர்கள் திடீரென செல்லத்தின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த செல்லம் சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

பின்னர் இது குறித்து பாடாலூர் போலீசில் செல்லம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வீட்டில் இருந்த மூதாட்டியிடம் தங்கச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story