இறந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலை


இறந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலை
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்து இறந்த மாணவரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தலையுடையவர்கோவில்பத்து கிராமம் கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் ரிஷிபாலன் (வயது 17). பள்ளி ஓட்டப்பந்தயப் போட்டியில் பங்கேற்றபோது மயங்கி விழுந்து எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். இறந்த மாணவரின் பெற்றோருக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டார். இதனையடுத்து ரூ.3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா, தரங்கம்பாடி தாசில்தார் சரவணன் இருந்தனர்.


Next Story