பாலமலை அடிவாரத்தில் மூடி கிடக்கும் சோதனை சாவடி
பாலமலை அடிவாரத்தில் மூடி கிடக்கும் சோதனை சாவடி
பாலமலை
பாலமலை அடிவாரத்தில் சோதனை சாவடி செயல்படாமல் மூடிக்கிடக்கிறது.ெபாதுமக்கள் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
பாலமலை
கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை உள்ளது. இந்த மலையின் மீது புகழ்பெற்ற அரங்கநாதர் கோவில் இருக்கிறது. இங்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலுக்கு செல்ல அடர்ந்த வனப்பகுதி வழியாகதான் செல்ல வேண்டும்.
இதற்காக பாலமலை அடிவாரத்தில் இருந்து 3 கி.மீ. தூரம் மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும். செல்லும் வழியில் காட்டுயானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை என்று வனவிலங்குகளின் நடமாட்டமும் அதிகமாக உண்டு. இதனால் அங்கு வனத்துறையின் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.
சோதனை சாவடி
இதற்காக பாலமலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு அதில், கண்காணிப்பு பணியில் ஈடுபட வனத்துறையினரும் நியமிக்கப்பட்டனர்.
ஆனால் கடந்த சில மாதங்களாக இந்த சோதனை சாவடி செயல்படாமல் மூடியே கிடக்கிறது.
இதன் காரணமாக இங்கு வரும் சிலர் மலைப்பாதையில் புதருக்கு அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் செல்லக்கூடிய நிலை நீடித்து வருகிறது. எனவே ெபாதுமக்கள் அத்துமீறி வனத்துக்குள் செல்வதால் ஆபத்து ஏற்படு்ம் நிலை உள்ளது.
இங்குள்ள சோதனை சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.