மாமல்லபுரம்: கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி பலி
மாமல்லபுரத்தில் விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியை பார்க்க சென்ற கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு
மாமல்லபுரம்:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நீரஜ்குமார் (வயது 18). கல்லூரி மாணவர். பி.ஏ.முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தாம்பரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்தார்.
நேற்று மாமல்லபுரத்தில் நடந்த விநாயகர் சிலை கரைக்கும் நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்காக நீரஜ்குமார் குடும்பத்தினருடன் வந்திருந்தார். பின்னர் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. அவரை குடும்பத்தினர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அருகில் உள்ள கடற்கரையில் நீரஜ்குமார் உடல் கரை ஒதுங்கியது. மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story