கல்குவாரி அமைக்க வலியுறுத்தி நடந்த கருத்துக் கேட்பு கூட்டம்


கல்குவாரி அமைக்க வலியுறுத்தி நடந்த கருத்துக் கேட்பு கூட்டம்
x

க.பரமத்தி பகுதியில் கல்குவாரி அமைக்க வலியுறுத்தி நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரூர்

கருத்துக் கேட்பு கூட்டம்

கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே உள்ள நடந்தை ஊராட்சி பகுதியில் புதிதாக கல்குவாரி அமைக்க கருத்துக் கேட்பு கூட்டம் எல்லமேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கரூர் கோட்டாட்சியர் கண்ணன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் பொதுமக்கள் சிலர் இந்த பகுதியில் கல்குவாரி அமைத்தால் எங்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் ஊராட்சிக்கு வருவாய் அதிகம் கிடைக்கும் அதனால் பல நன்மைகள் கிடைக்கும் என ஆதரவு தெரிவித்தனர்.

எதிர்ப்பு

சமூக ஆர்வலர் முகிலன் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் சிலர் இந்த பகுதியில் கல்குவாரி அமைந்தால் நிலநடுக்கம், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும், தீமைகள் பல நடக்கும் எனவே அமைக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதில் கல்குவாரி உரிமையாளர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story