மதம் மாறியவரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாக அறிவிக்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மதம் மாறியவரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாக அறிவிக்க முடியாது-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

மதம் மாறியவரை பிற்படுத்தப்பட்ட முஸ்லிமாக அறிவிக்க முடியாது என மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அக்பர்அலி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நானும், என் குடும்பத்தினர் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறினோம். நான் லெப்பை சமூகத்தைச் சேர்ந்தவர் என வருவாய் அதிகாரி சாதிச்சான்றிதழ் வழங்கியுள்ளார். இதன் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் விண்ணப்பித்து, தேர்வு எழுதினேன். ஆனால் என்னை பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் பரிசீலிக்காததால் வேலைக்கு தேர்வாகவில்லை. என்னை பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் பிரிவில் பரிசீலித்து வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். பின்னர், மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் பிறப்பித்த உத்தரவு சரியானது தான். அதில் தலையிட முடியாது. இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Related Tags :
Next Story