விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
x

10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

10 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு வருகிற 29-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மறுகூட்டல்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த மே மாதம் 10 -ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து, விருப்பமுள்ள மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, பள்ளியில் பயின்ற மாணவர்கள் அந்தந்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தங்கள் எழுதிய தேர்வு மையத்திலும் வருகிற 29-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

10-ம்வகுப்பு மறுகூட்டலுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.305-ம், பிளஸ்-2 மறு கூட்டலுக்கு உயிரியியல் பாடத்துக்கு ரூ.305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ.205 கட்டணம் செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.

விடைத்தாள் நகல்

பிளஸ்-2 மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற, ஒவ்வொரு பாடத்துக்கும் தலா ரூ.275 செலுத்தி ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். மறுக்கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் உள்ளிட் டவை ஆன்லைனில் பதிவு செய்ய வருகிற 29-ந் தேதி கடைசி நாளாகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story