குப்பையில்லா சூழலை உருவாக்க தேவையற்ற பொருட்களை சேகரிக்கும் மாநகராட்சி
குப்பையில்லா சூழலை உருவாக்க தேவையற்ற பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
திருநெல்வேலி
நெல்லை மாநகராட்சியில் குப்பை இல்லாத சூழலை உருவாக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேவையற்ற பொருட்கள் இருந்தால் அதனை மாநகராட்சி சுகாதார அலகு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடலாம். அந்த பொருட்களில் தங்களுக்கு தேவையான பொருள் இருந்தால் அதை தேவைப்படுவோர் எடுத்துச்செல்லலாம். நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா மேற்பார்வையில் 10 சுகாதார அலகு அலுவலகங்களிலும் இந்த சேகரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், தூய்மை பணியாளர்கள் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறார்கள். அதாவது, ''தேவைஇல்லாதோர் வைத்திடுக, தேவைப்படுவோர் எடுத்திடுக'' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story