காரியாபட்டியில் விரைவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்


காரியாபட்டியில் விரைவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும்
x

காரியாபட்டியில் விரைவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டியில் விரைவில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என வக்கீல்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிைறவேற்றப்பட்டது.

நீதிமன்றம்

காரியாபட்டி, ஆவியூர், மல்லாங்கிணறு ஆகிய 3 போலீஸ்நிலையங்களிலும் வருடத்திற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட குற்றவழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. குற்ற வழக்கிற்காக பொதுமக்கள் விருதுநகரில் உள்ள நீதிமன்றத்திற்கு தான் சென்று வருகின்றனர். காரியாபட்டியிலிருந்து விருதுநகர் நீதிமன்றம் சென்று வருவது மிகவும் கடினமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பல்வேறு சிவில் வழக்குகளுக்காக அருப்புக்கோட்டை சென்று வருகின்றனர். ஆதலால் காரியாபட்டியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் அடிப்படையில் காரியாபட்டியில் நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு உத்தரவிட்ட பின்பு தற்காலிகமாக ஒரு கட்டிடத்தில் நீதிமன்றம் அமைப்பதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட நீதிபதிகள் பார்வையிட்டு சென்ற பின்னரும் இதுவரை நீதிமன்றம் அமையவில்லை.

தீர்மானம்

இந்தநிலையில் காரியாபட்டி வட்டார வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மூத்த வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் தலைமை தாங்கினார்.

வழக்கறிஞர்கள் சங்க கூட்டத்தில் காரியாபட்டியில் விரைவில் நீதிமன்றம் அமைக்கவும், வழக்கறிஞர் சங்கம் பதிவு செய்தல், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு செய்வது சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.


Next Story