கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x

கிணற்றுக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

கரூர்

புகழூர் அருகே முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று சுமார் 50 அடி ஆழம் உள்ள கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்தது. இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அந்த பசுமாட்டை மீட்க முயற்சித்தும் இருப்பினும் முடியவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் கோமதி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை கயிற்றால் கட்டி லாவமாகமீட்டனர். பின்னர் உரிமையாளிடம் பசுமாடு ஒப்படைக்கப்பட்டது.


Next Story