2 கன்றுகளை ஈன்ற பசு


2 கன்றுகளை ஈன்ற பசு
x

பசுமாடு ௨ கன்றுகளை ஈன்றது

திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே திருவாசி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் பரணிதரன் (வயது 20). விவசாயியான இவர் பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் பசுமாடுகளில் ஒன்று இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது. அந்த பசு தனது முதல் பிரசவத்தில் ஆண் கன்றுக்குட்டியை ஈன்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக சினைபிடித்த அந்த பசு நேற்று முன்தினம் ஆண், பெண் என இரண்டு கன்றுக்குட்டிகளை ஒரே நேரத்தில் அடுத்தடுத்து பிரசவித்துள்ளது. 2 கன்றுகளை ஈன்ற பசுமாட்டை கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story