சனீஸ்வரர் சன்னதியில் தினமும் தரிசனம் செய்யும் காகம்...! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு


சனீஸ்வரர் சன்னதியில் தினமும் தரிசனம் செய்யும் காகம்...! மெய் சிலிர்க்க வைக்கும் நிகழ்வு
x

காஞ்சிபுரம் அருகே சனீஸ்வரர் சன்னதியில் காகம் ஒன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள நட்சத்திர விருச்ச விநாயகர் கோயிலில் உள்ள சனீஸ்வரர் சன்னதியில் காகம் ஒன்று அர்ச்சகரை அழைத்து அபிஷேக பாலை அருந்தும் காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இங்கு நாள்தோறும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். நாள் தவறாமல் இங்கு வரும் சனீஸ்வரரின் வாகனமாக கருதப்படும் காக்கை, சாமி தரிசனம் செய்து விட்டு சன்னதி கோபுரத்தில் அமர்ந்து கொண்டு "கா.. கா" என கத்தி அர்ச்சகரை அழைத்து, அபிஷேக பாலை அருந்தி விட்டு செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

1 More update

Next Story