முருகனின் திருவிளையாடல் குறித்த நாட்டிய நாடகம்


முருகனின் திருவிளையாடல் குறித்த நாட்டிய நாடகம்
x
தினத்தந்தி 19 Feb 2023 12:15 AM IST (Updated: 19 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயூரநாதர் கோவில் நாட்டியாஞ்சலியில் முருகனின் திருவிளையாடல் குறித்த நாட்டிய நாடகம் திரளானோர் கண்டு ரசித்தனர்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு தென்னகப் பண்பாட்டு மையம், மத்திய அரசின் கலாச்சாரத்துறை மற்றும் சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் 17-ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளில் சென்னை பிரேமாலயா நாட்டிய நிகேதன் குழுவினர், கோவை சிவந்ருத்யாஞ்சலி நாட்டியப்பள்ளி குழுவினர், கோவை லாவண்யா ஷங்கர் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. மயிலாடுதுறை மயிலை சப்தஸ்வரங்கள் நுண்கலை பயிற்சியக குழுவினர் அறுபடைவீடு என்ற தலைப்பில் முருகனின் திருவிளையாடல்கள் குறித்த நாட்டிய நாடகத்தை நடத்தினர். இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதேபோல் பெங்களூரு ப்ளூட் மற்றும் பீட் அகாடமி குழுவினர், கோவை லாஸ்யா சித்ரா ஸ்கூல் ஆப் டான்ஸ் குழுவினரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நாட்டியாஞ்சலி விழாவில் கலந்து கொண்ட கலைஞர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா, ராஜகுமார் எம்.எல்.ஏ., அறங்காவலர் சிவலிங்கம் உள்ளிட்டோர் சான்றிதழும், நினைவு பரிசுகளும் வழங்கினர்.


Next Story