இருள் சூழ்ந்து காணப்படும் நான்கு வழிச்சாலை
கோவை - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
கோவை - பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
வாகன விபத்து
கோவை-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அகலப்படுத்தப்பட்டது. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன.
ஒத்தக்கால்மண்டபம், கிணத்துக்கடவு, தாமரைக்குளம், கோவில் பாளையம், ஆச்சிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலையின் நடுவே நெடுஞ்சாலைத்துறை சார்பில் எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
தற்போது கடந்த சில நாட்களாக நான்கு வழிச்சாலையில் பல்வேறு இடங்களில் மின்விளக்குகள் எரிவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மின் விளக்குகள்
மேலும் நான்கு வழிச்சாலையில் இருள் சூழ்ந்து கிடப்பதால் வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
இது குறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-
கோவை- பொள்ளாச்சி நான்கு வழிச்சாலையில் வாகன விபத் துகள் அதிகரித்து உள்ளது. இதற்கு கிணத்துக்கடவு, தாமரைக் குளம், கோவில்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மின் விளக்கு கள் எரியாமல் இருப்பதே காரணம்.
மேலும் பொதுமக்களிடம் செல்போன், பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் பறிக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க சாலையில் எல்.இ.டி. மின் விளக்குகளை எரிய செய்ய தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.