பழுதான பேட்டரி காரை சரி செய்ய வேண்டும்


பழுதான பேட்டரி காரை சரி செய்ய வேண்டும்
x

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பழுதான பேட்டரி காரை சரி செய்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை


திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பழுதான பேட்டரி காரை சரி செய்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறப்பு முகாம்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமையன்று மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் தினாளிகள் நல அலுவலர் தங்கமணி தலைமை தாங்கினார்.

முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் தங்களுடைய பராமரிப்பாளர்களுடன் கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை புதிதாக பெறுவதற்கும், புதுப்பித்துக் கொள்ளவும் நேரடியாக விண்ணப்பித்தனர்.

அப்போது சிறப்பு மருத்துவர்கள் அவர்களை பரிசோதனை செய்து அடையாள அட்டை பெற பரிந்துரை செய்தனர். இதில் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பழுதான பேட்டரி கார்

மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்கள் நலன் கருத்தில் அவர்கள் சிரமமின்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலகத்திற்கு செல்வதற்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள பஸ் நிலையத்தில் இருந்து அலுவலக வளாகத்திற்குள் பேட்டரி கார் இயக்கப்பட்டது.

இந்த பேட்டரின் காரின் பேட்டரி பழுது ஏற்பட்டு கடந்த சில நாட்களாக இயக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் நேற்று மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக வந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு நடந்து சென்றனர்.

பேட்டரி கார் இயக்கப்பட்டு இருந்தால் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து இருக்கும்.

எனவே மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியவர்களின் நலனை கருத்தில் கொண்டு பழுதான பேட்டரி காரை சரி செய்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story