வாகனத்தில் அடிபட்டு மான் பலி


வாகனத்தில் அடிபட்டு மான் பலி
x

வாகனத்தில் அடிபட்டு மான் பலியானாது.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி அருகே காளையார்கரிசல்குளம் கண்மாய் பகுதியில் இருந்து புள்ளி மான் ஒன்று தண்ணீர் தேடி காளையார் கரிசல்குளம் கண்மாய் வழியாக வந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மானுக்கு காயம் ஏற்பட்டு இறந்தது. இதைகண்ட அப்பகுதி மக்கள் வனசரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வத்திராயிருப்பு வன சரக அலுவலர் பிரபாகரன் தலைமையில் வனக்காப்பாளர் ஆறுமுகம், வேட்டை தடுப்பு காவலர் ராஜேந்திர பிரபு ஆகியோர் வந்து இறந்த மானை மீட்டு புதைத்தனர்.


Next Story