கத்திமுனையில் மனைவி, மகனை கடத்திய மாற்றுத்திறனாளி


கத்திமுனையில் மனைவி, மகனை கடத்திய மாற்றுத்திறனாளி
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் கத்திமுனையில் மனைவி, மகனை மாற்றுத்திறனாளி கடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோயம்புத்தூர்

கோவை

தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்ததால் கத்திமுனையில் மனைவி, மகனை மாற்றுத்திறனாளி கடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கருத்து வேறுபாடு

கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும், சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான கோபிநாத் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்தநிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அந்த பெண், கோவையில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மேலும் அவர்களது விவாகரத்து தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

சேர்ந்து வாழ மறுப்பு

இதற்கிடையில் கடந்த தீபாவளியன்று கோவைக்கு வந்த கோபிநாத், அவரது மனைவியை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனால் அதற்கு அவரது மனைவி மறுத்து விட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதையடுத்து கோபிநாத் தனது உறவினர்கள் சிலருடன் கோவைக்கு மீண்டும் வந்தார். அப்போது பெற்றோர் வீட்டில் அவரது மனைவி தனது மகனுடன் தனியாக இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தார். ஆனாலும் அவர், கணவருடன் செல்ல மறுத்துவிட்டார்.

காரில் கடத்தல்

இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் மற்றும் அவருடன் வந்தவர்கள் கத்திமுனையில் மிரட்டி அவரது மனைவி மற்றும் மகனை காரில் கடத்தி சென்றனர். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story