சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,570 கனஅடி நீர் வெளியேற்றம்


சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,570 கனஅடி நீர் வெளியேற்றம்
x

பாதுகாப்பு கருதி சாத்தனூர் அணையில் இருந்து வினாடிக்கு 1,570 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும்.

இதில் 7 ஆயிரத்து 321 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இடது மற்றும் வலதுபுற கால்வாய் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெற்று வருகின்றன.

தற்போது பரவலாக கனமழை பெய்து வருவதோடு கிருஷ்ணகிரி அணையில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அதிகரித்துள்ளது.

இதனால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1620 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சாத்தனூர் அணையில் 117 அடி வரை நீர் நிரம்பியுள்ளதால் அணையில் 6 ஆயிரத்து 842 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைத்து மீதமுள்ள நீரை வினாடிக்கு 1,570 கன அடி உபரிநீராக தென்பெண்ணைஆற்றில் வெளியேற்றி வருகின்றனர்.

இந்த உபரி நீர் வெளியேற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோர வாழ் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story