முதியவரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு வாலிபர் கொலையில் முடிந்தது-சுடுகாட்டில் உருட்டுக்கட்டையால் அடித்துக்ெகான்ற 3 பேருக்கு வலைவீச்சு

முதியவரின் இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு வாலிபர் கொலையில் முடிந்தது-சுடுகாட்டில் உருட்டுக்கட்டையால் அடித்துக்ெகான்ற 3 பேருக்கு வலைவீச்சு
x

ராஜபாளையம் அருகே முதியவரின் இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டது. சுடுகாட்டுக்கு சென்றதும் 3 பேர் சேர்ந்து, வாலிபரை அடித்துக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே முதியவரின் இறுதி ஊர்வலத்தில் தகராறு ஏற்பட்டது. சுடுகாட்டுக்கு சென்றதும் 3 பேர் சேர்ந்து, வாலிபரை அடித்துக்கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துக்க நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காளவாசல் பகுதியைச் சேர்ந்த ராமசாமி (வயது 70) என்பவர் மரணம் அடைந்தார். இவரது உடலை மயானத்திற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர்.

சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்தை சேர்ந்த பாலமுருகன்(37), இந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, ஊர்வலத்தில் உடன் சென்றார். சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் பூமாலையில் இருந்து பூக்களை எடுத்து தெருவில் வீசிக்கொண்டே பாலமுருகன் சென்றார்.

தகராறு

இதை சிவகாசி அருகே பாலையாபுரம் கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் தட்டிக்கேட்டார். பாலமுருகன் அப்படித்தான் போடுவேன் என்று கூறினார்.

இதனால் அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் சமரசம் செய்தனர். அதன்பின் சுடுகாட்டுக்கு சென்று, முதியவர் ராமசாமி உடலை அடக்கம் செய்து ெகாண்டிருந்தனர்.

அடித்துக்கொலை

அப்போது சுந்தர்ராஜன் மற்றும் அவரது மகன்கள் முத்துகிருஷ்ணன், முத்துச்செல்வம் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலமுருகனிடம் தகராறு செய்தனர். மேலும் அவர்கள் உருட்டுக்கட்டையால் பாலமுருகனை தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தந்தை, மகன்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இந்த கொலை குறித்து பாலமுருகன் மனைவி முத்துலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Next Story