மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விவசாயி பலி


மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விவசாயி பலி
x

நொய்யல் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

அரசு பஸ் மோதல்

கரூர் மாவட்டம், மாரப்ப காலனி பைபாஸ் ரோடு கிழக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 65). விவசாயி. இவரது தோட்டம் மூலிமங்கலம் செல்லும் சாலையில் உள்ளது. இந்நிலையில் முருகன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கால்நடைகளுக்கு போடுவதற்கான தீவனங்கள் முன்னாள் ஏற்றிக்கொண்டு தோட்டத்திற்கு சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ெசன்று கொண்டிருந்தார். அப்போது மூலிமங்கலம் பிரிவு அருகே சாலையை முருகன் தனது மோட்டார் சைக்கிளில் கடந்த போது கரூரி ல் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பஸ் முருகன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முருகன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து டிரைவர் அரசு பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.

விவசாயி பலி

இதையடுத்து படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முருகனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து முருகனின் மனைவி பாப்பாத்தி (62) ெகாடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிந்து, முருகனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story