மாட்டு வண்டியில் இமயமலைக்கு செல்லும் விவசாயி


மாட்டு வண்டியில் இமயமலைக்கு செல்லும் விவசாயி
x

நெல்லை வழியாக மாட்டு வண்டியில் இமயமலைக்கு விவசாயி புறப்பட்டுச் சென்றார்.

திருநெல்வேலி

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் சந்திரசூரியன். பட்டதாரியான இவர் விவசாயம் செய்து வருகிறார். இவர் கடந்த 1-ந்தேதி கன்னியாகுமரியில் இருந்து ஒற்றை மாட்டு வண்டியில் இமயத்துக்கு பயணத்தை தொடங்கினார். நேற்று நெல்லை மாநகர பகுதிக்கு வந்தார். அவர் வண்ணார்பேட்டை பகுதியில் விவசாயம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

இதுகுறித்து சந்திரசூரியன் கூறியதாவது:-

பட்டம் படித்த போதிலும், விவசாயம் மீது எனக்குள் இருந்த அளவில்லாத ஆர்வத்தால், வீட்டில் கடும் எதிர்ப்பையும் தாண்டி நான் விவசாயத்தில் இறங்கினேன். விவசாய பொருட்களுக்கு போதிய விலையில்லாமல் போனதால் நான் மனமுடைந்தேன். விவசாயம் என்பது ஒரு தொழிலே அல்ல. அது ஒப்பிட முடியாத உயிர்களை காக்கும் ஒரு புண்ணியசெயல். மேலும் சிலர் விவசாயம் செய்ய நிலம் இருந்தும், பணத்துக்காக வேலை தேடி வெளியூர் போறாங்க.

இந்த மாதிரி வேதனைதான் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால் தொலைதூர விழிப்புணர்வு பயணமாக கன்னியாகுமரி முதல் இமயம் வரை பயணத்தை தொடங்கினேன். 5 மாதங்களில் இமயமலைக்கு செல்ல முடிவு செய்து பயணிக்கிறேன். எனக்கு உற்ற துணையாக எனது காளை மாடும் (செகப்பி) உள்ளது. செல்லும் வழியில் விவசாயம் காக்க விழிப்புணர்வு பிரசாரமும் செய்து வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story