மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 8 Aug 2023 12:45 AM IST (Updated: 8 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

மண்எண்ணெய் ஊற்றி...

குமரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மனு கொடுக்க ஏராளமானோர் வந்தனர்.

அந்த சமயத்தில் பூதப்பாண்டி அருமநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுவிசேஷமுத்து (வயது 72) என்ற விவசாயி கலெக்டர் அலுவலக பின் வாசல் வழியாக உள்ளே சென்று முன்புற வாசலுக்கு வந்தார். அப்போது அவர் திடீரென தனது உடலில் மண்எண்ணெைய ஊற்றிய நிலையில் மயங்கி கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அலுவலகத்தில் வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த தி.மு.க. நிர்வாகிகள் துரிதமாக செயல்பட்டு மண்எண்ணெய்யை உடலில் ஊற்றிய சுவிசேஷமுத்துவை மடக்கினர். பின்னர் அவரை மீட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தோட்டத்துக்கு தீ வைப்பு

இதைத் தொடர்ந்து சுவிசேஷமுத்துவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், "எனக்கு சொந்தமான தோட்டம் புளியடி ஊரின் தெற்கு பகுதியில் உள்ளது. முன்விரோதம் காரணமாக என் தோட்ட வேலியை பொக்லைன் எந்திரம் மூலமாக 2 பேர் அகற்றினர். மேலும் தோட்டத்துக்கும் தீ வைத்து விட்டனர். இதுதொடர்பாக பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். எனினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தான் வேறு வழி தெரியாமல் தற்கொலை முடிவை எடுத்தேன்" என்றார்.

இந்த விவகாரம் குறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து சுவிசேஷமுத்து அங்கிருந்து சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தன்னுடைய உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பட்டது.


Next Story