ரெயிலில் அடிபட்டு பெண் மயில் செத்தது


ரெயிலில் அடிபட்டு பெண் மயில் செத்தது
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே ரெயிலில் அடிபட்டு பெண் மயில் செத்தது

விழுப்புரம்

திண்டிவனம்

புதுச்சேரியில் இருந்து நேற்று காலை எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. திண்டிவனம் ரெயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் மயில் ஒன்று ரெயிலில் அடிபட்டு செத்தது. இதைப்பார்த்த ரெயில்வே பாதுகாப்பு படை பெண் வீரர் காயத்ரி, ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர் தேசியிடம் தகவல் தெரிவித்தார். உடனே அவா் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்றார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த வனக்காப்பாளர் கஜேந்திரனும் அங்கு வந்தார். அவரிடம் ரெயிலில் அடிபட்டு செத்து கிடந்த பெண் மயிலை ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஒப்படைத்தனர். மயில் தேசிய பறவை என்பதால் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வோம் என வனத்துறை அதிகாரி தெரிவித்தார்.


Next Story