விழுப்புரம் நகராட்சி 26-வது வார்டில்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம்


விழுப்புரம் நகராட்சி 26-வது வார்டில்பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம்
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-13T00:15:34+05:30)

விழுப்புரம் நகராட்சி 26-வது வார்டில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

விழுப்புரம்

பொங்கல் பரிசு தொகுப்பு

விழுப்புரம் நகராட்சி 26-வது வார்டுக்குட்பட்டது வ.பாளையம். இப்பகுதியில் உள்ள ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக வார்டு கவுன்சிலரான அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயப்பிரியா சக்திவேல் அந்த ரேஷன் கடைக்கு வந்தார். அப்போது அங்கு வந்த தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சண்முகம் என்பவர், நாங்கள் தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவோம் என்று அ.தி.மு.க. கவுன்சிலர் ஜெயப்பிரியா சக்திவேலிடம் கூறி தகராறில் ஈடுபட்டார்.

கடும் வாக்குவாதம்

அதற்கு வார்டு கவுன்சிலர் என்ற முறையில், நான்தான் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவேன், அதில் எந்த தவறும் இல்லையே என ஜெயப்பிரியா சக்திவேல் கூறினார். இதனால் அ.தி.மு.க.வினர் மற்றும் தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அதன் பின்னர் வார்டு கவுன்சிலர் ஜெயப்பிரியா சக்திவேல், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அப்போது முன்னாள் கவுன்சிலர் சண்முகம், நானும் வழங்குவேன் என்றுகூறி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். இச்சம்பவத்தினால் அங்கு சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story