வீடு கட்டிக் கொடுத்த ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்


வீடு கட்டிக் கொடுத்த ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
x

வீடு கட்டிக் கொடுத்த ஒப்பந்ததாரருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகா்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா பீவி. இவர் நாகர்கோவில் கீழராமன்புதூரில் ஒரு ஒப்பந்ததாரரிடம் வீடு கட்டி தர கேட்டுக் கொண்டார். இதற்காக ரூ.18 லட்சத்து 65 ஆயிரத்தை ஒப்பந்ததாரர் ஆயிஷா பீவியிடம் பெற்றுள்ளார். இந்த பணத்தில் 1 தளத்தை மட்டுமே கட்டியுள்ளார். ஒப்பந்தத்தில் கூறியபடி வேறு எந்த வேலையும் செய்து கொடுக்கவில்லை. மேலும் கட்டப்பட்ட வீட்டின் எல்லா பகுதிகளிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு இவர் தரமில்லாத பொருட்களை கொண்டு வீடு கட்டியதும் தெரிய வந்தது. மேலும் ஒரு நிபுணரைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றதில் வீடு கட்டிய ஒப்பந்ததாரர் கூடுதலாக ரூ.3,97,226 பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ஆயிஷா பீவி வக்கீல் மூலம் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் மன வேதனை அடைந்த ஆயிஷா பீவி, குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் ஒப்பந்ததாரரின் கட்டுமான பணியில் உள்ள குறைப்பாட்டினை சுட்டிக்காட்டி பாதிக்கப்பட்ட ஆயிஷா பீவியிடம் அதிகமாக பெற்ற தொகையான ரூ.3 லட்சம் மற்றும் அபராதமாக ரூ.25 ஆயிரம் ஆகியவற்றுடன் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


Next Story