தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்


தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம்
x

ஆத்தூர் வட்டாரத்தில் தகுதி சான்று புதுப்பிக்காத வாகனங்களுக்கு ரூ.3½ லட்சம் அபராதம் விதித்து மோட்டார் வாகன அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எம்.ரகுபதி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் ஏ.செல்வகுமார் தலைமையில் மோட்டார் வாகன அதிகாரிகள் ஆத்தூர், தலைவாசல் மற்றும் ஏத்தாப்பூர் பகுதிகளில் வாகன சேதனை செய்தனர். இதில் வாகனங்களில் தகுதி சான்று, உரிமம் புதுப்பிக்காத, ஆட்டோ சரக்கு வாகனங்கள் அனுமதி சீட்டு இல்லாமலும், தகுதி சான்று இல்லாமலும், ஓட்டுனர் உரிமம் மற்றும் காப்பு சான்று இல்லாமல் இயக்கிய 4 ஆட்டோ மற்றும் அனுமதிக்கு அதிகமான எடையுடன் ஓட்டிய 2 கனரக சரக்கு வாகனங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இதேபோன்று கனரக சரக்கு வாகனங்களில் அனுமதிக்கு அதிகமாக பாரம் ஏற்றிச்சென்ற 4 வாகனங்களுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. வாகன வரி இல்லாமல் இயக்கிய பொக்லைன் வாகனத்தை சோதனையின் போது கண்டுபிடித்த அதிகாரிகள், அந்த எந்திர உரிமையாளர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரி ரூ.14 ஆயிரத்து 550-யை வசூல் செய்தனர்.

இதேபோன்று தகுதிச்சான்று, காப்பு சான்று, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்கிய 2 மினி சரக்கு வாகனங்கள் தலைவாசல் போலீஸ் நிலையத்துக்கும், 2 வாகனங்கள் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்திற்கும் கொண்டு சென்று நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த வாகன சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு சுமார் ரூ.2 லட்சம் அபராதமும், ரூ.1½ லட்சம் இணக்க கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story