ஹெல்மெட் அணியாமல் சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1000 அபராதம்


ஹெல்மெட் அணியாமல் சென்ற  சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1000 அபராதம்
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய போது ஹெல்மெட் அணியாமல் சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய போது ஹெல்மெட் அணியாமல் சென்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர்.

வாகன சோதனை

நாகர்கோவில் மாநகரில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுபவர்கள் என சாலைவிதியை மீறும் வாகன உரிமையாளர்கள் மீது போக்குவரத்து போலீசார் அபராதம் மற்றும் வாகன பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் நேற்று கோட்டார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நேசமணி நகர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் போலீஸ் சீருடையில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்தார்.

ரூ.1,000 அபராதம்

உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்து ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதால் சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும் விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீசார் தெரிவித்தனர்.


Next Story