விதிகளை மீறிய 3 வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்


விதிகளை மீறிய 3 வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 14 July 2023 12:15 AM IST (Updated: 15 July 2023 5:04 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி வாகனங்களில் 2-வது நாளாக நடத்திய சோதனையில் விதிமுறைகளை மீறிய 3 வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகங்கை

பள்ளி வாகனங்களில் 2-வது நாளாக நடத்திய சோதனையில் விதிமுறைகளை மீறிய 3 வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரூ.15 ஆயிரம் அபராதம்

சிவகங்கை பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி கூடத்திற்கு மாணவ-மாணவிகளை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து மாணவர் ஒருவர் இறந்தார். நேற்று சிவகங்கை அருகே தனியார் கல்வியியல் கல்லூரி வேன் ஒன்று மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அடுத்தடுபள்ளி வாகனங்களில் 2-வது நாளாக நடத்திய சோதனையில் விதிமுறைகளை மீறிய 3 வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.த்து நடைபெற்ற இந்த சம்பவங்களை தொடர்ந்து பள்ளி வாகனங்கள் மற்றும் கல்லூரி வாகனங்கள் உரிய விதிமுறைப்படி இயக்கப்படுகிறதா? போதுமான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்யவும் கூடுதல் வாகனங்கள் உள்ள பள்ளிகளில் சென்று ஓட்டுனர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கலெக்டர் ஆஷா அஜீத் உத்தரவிட்டார்.

இதையடுத்து சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் தலைமையில் போக்குவரத்து அதிகாரிகள் 2-வது நாளாக நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் அனுமதி இல்லாமல் பணியாற்றிய நடத்துனர்கள், கூடுதல் மாணவ-மாணவிகளை ஏற்றி வந்த வாகனங்கள் உள்பட 3 பள்ளி வாகனங்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் எப்.சி. இல்லாமல் இருந்த ஒரு ஆட்டோ மற்றும் ஒரு வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

விழிப்புணர்வு

தொடர்ந்து சிவகங்கையை அடுத்த சுந்தர நடப்பு கிராமத்தில் உள்ள பள்ளியில் வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன், மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் ஆகியோர் சென்று பள்ளி பஸ் மற்றும் வேன் ஓட்டுனர்களை அழைத்து அவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். வாகனத்தை ஓட்டும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மாணவ-மாணவிகளை பாதுகாப்பாக ஏற்றி பின்னர் இறக்கி விடும்போது சாலையை கடந்து இறக்கி விட வேண்டும் என்று தெரிவித்தனர்.

வாகனத்தை ஓட்டும் டிரைவர் மற்றும் நடத்துனர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அனுமதி பெற்று உரிய சீருடைகளுடன் இருக்க வேண்டும் என்றும், வாகனத்தில் குறிப்பிட்ட அளவு மட்டும் மாணவ-மாணவிகளை ஏற்ற வேண்டும், எதிர்புறம் வாகனங்கள் வரும்போது பாதுகாப்பான இடங்களில் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதில் பள்ளி முதல்வர் இக்னிசியஷ் மற்றும் பள்ளி வாகனங்களின் நடத்துனர்கள், ஓட்டுனர்கள் கலந்து கொண்டனர்.


Next Story