கோவையில் பிரபல ஓட்டலில் தீ விபத்து
கோவையில் பிரபல ஓட்டலில் தீ விபத்து
சிவானந்தாகாலனி
கோவை சிவானந்தா காலனியில் கொக்கரக்கோ என்ற பெயரில் பிரபல அசைவ ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் உள்ள சமையல் அறையில் நேற்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த கோவை வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் சுரேஷ்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் சமையல் அறையில் பற்றி எரிந்த தீயானது அருகே உள்ள பில்லிங் கவுண்ட்டரிலும் பரவியது. அப்போது கரும்புகை வெளியேறிது.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் காட்டூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தீவிபத்தில் ஓட்டலின் சமையலறையில் இருந்த பொருட்கள் மற்றும் கணினி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. தொடர்ந்து காட்டூர் போலீசார் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.