சென்னை பாடி மேம்பாலம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து


சென்னை பாடி மேம்பாலம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து
x

தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வானுயர கரும்புகை சூழ்ந்தது.

சென்னை,

சென்னை பாடியில் உள்ள மேம்பாலம் அருகே தனியார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் கழிவுகளை சேமித்து வைக்கும் கிடங்கில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

அந்த கிடங்கில் ரப்பர், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஆயில் கலந்த பொருட்கள் அதிக அளவில் இருந்ததால் தீ மளமளவென பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் வானுயர கரும்புகை சூழ்ந்தது. இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர்.

அம்பத்தூர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் இருந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அந்த தொழிற்சாலையின் அருகே டிரான்ஸ்பார்மர் உள்ள நிலையில், அங்கு தீ பரவாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story