காரில் பற்றி எரிந்த தீ


காரில் பற்றி எரிந்த தீ
x
தினத்தந்தி 24 May 2023 12:30 AM IST (Updated: 24 May 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் தொழிலதிபர் கார் தீப்பற்றி எரிந்தது.

திண்டுக்கல்

திண்டுக்கல் குள்ளனம்பட்டியை சேர்ந்தவர் அரவிந்தராஜ் (வயது 28). தொழில் அதிபர். நேற்று இரவு இவர், தனது காரில் வீட்டின் அருகே இருந்து புறப்பட்டார். அப்போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகையாக கிளம்பியது. இதை கவனித்த அரவிந்தராஜ் காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு இறங்கினார். இதற்கிடையே கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. பின்னர் அவர் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் தீயணைப்பு நிலைய உதவி மாவட்ட அலுவலர் சிவக்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு காரில் பற்றிய தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் கார் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story