வைக்கோல் படப்பில் தீ
வைக்கோல் படப்பில் தீ பற்றியது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா அரசத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜரத்தினம். நேற்று மாலை இவருக்கு சொந்தமான வைக்கோல் படப்பில் திடீரென தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதற்கிடையே வைக்கோல் படப்பில் தீ எரிந்து கொண்டிருந்தபோது 2 பாம்புகள் அதில் இருந்து வெளியே வந்ததை பார்த்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story