கரும்பு தோட்டத்தில் தீ விபத்து


கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி

வாணாபுரம்,

வாணாபுரம் அருகே பகண்டை கூட்டுரோட்டை சேர்ந்தவர் அப்பாவு மகன் சரவணன் (வயது 48). இவர் தனது விளைநிலத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை இவரது கரும்புத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் மின்ஒயர்கள் உரசியதாக தெரிகிறது. இதில் தீப்பொறி ஏற்பட்டு, கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரும்பு பயிர்கள் தீயில் கருகி சேதமடைந்தது.


Next Story