தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பத்தூரில் தனியார் நிதி நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் தனியார் நிதி நிறுவனம் உள்ளது. இந்த நிதி நிறுவனத்தில் இருந்து நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென புகை வந்தது.
இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு மாவட்ட உதவி அலுவலர் (பொறுப்பு) முருகன் தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று 20 நிமிடங்கள் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story