இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி
கொல்லங்கோடு அருகே சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கொல்லங்கோடு:
கொல்லங்கோடு அருகே சாலையில் நடந்து சென்ற இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பலாத்காரம் செய்ய முயற்சி
கொல்லங்கோடு அருகே உள்ள மஞ்சதோப்பில் இருந்து சாலை ஓரம் 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென அவரை வழிமறித்தனர்.
பின்னர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவர்கள் பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத இளம்பெண் அதிர்ச்சி அடைந்ததோடு சத்தம் போட்டார். உடனே பொதுமக்கள் அங்கு திரண்டு வரவே அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி விட்டனர்.
இதுபற்றி இளம்பெண் பெற்ேறாரிடம் கூறி கதறி அழுதார். இதனை தொடர்ந்து இளம்பெண்ணின் பெற்றோர் இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தனர்.
3 பேர் தலைமறைவு
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், பெண்ணிடம் அத்துமீறியவர்கள் தாளவிளையைச் சேர்ந்த ஜோபின் (வயது 21), வினீஷ் (24), முகேஷ் (26) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்ததும் அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் ேதடிவருகின்றனர்.