கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேர் கும்பல் சிக்கியது


கொள்ளையடிக்க திட்டமிட்ட 6 பேர் கும்பல் சிக்கியது
x
தினத்தந்தி 19 Aug 2023 12:45 AM IST (Updated: 19 Aug 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

செல்வபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டு சுற்றிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்


செல்வபுரம்


செல்வபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டு சுற்றிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.


இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-


ரகசிய தகவல்


கோவை மாநகரில் குற்றங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமையில்போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். கோவை செல்வபுரம் பகுதியில் நேற்று அதிகாலையில் போலீசார் ரோந்து சென்றனர்.


அப்போது தெலுங்குபாளையம் சாஸ்தா நகரில் 7 பேர் கொண்ட கும்பல் சந்தேகத்துக்கு இடமாக சுற்றுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


தப்பி ஓட முயற்சி


அப்போது அங்கு பூட்டிய வீட்டின் முன்பு 7 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து மது அருந்தி கொண்டு இருந்தது. அந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தது.


உடனே போலீசார் விரைந்து சென்று அந்த கும்பலை சுற்றி வளைத்தனர். அதில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். மற்ற 6 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.


6 பேர் கைது


அதில் அவர்கள், கோவை உக்கடத்தை சேர்ந்த பீர்முகமது (வயது 26), தெலுங்குபாளையத்தை சேர்ந்த தனஞ்செயன் (31), மாணிக்கம் (31), ஜான் ஜோசப் (32), ஜெகன் (26), மணிகண்டன் (29) ஆகியோர் என்பதும், அவர்கள் சாஸ்தாநகரில் உள்ள ஒரு வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே சென்று கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரிய வந்தது.


இதையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் கைது செய்தனர். இதில் பீர்முகமது மீது கத்திக்குத்து, வழிப்பறி உள்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகளும், சிலர் மீது கொள்ளை, வழிப்பறி வழக்குகளும் உள்ளன.

இதையடுத்து போலீசார் அந்த 6 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கத்தி, உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தப்பி ஓடிய சங்கர் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.



Next Story