சரக்கு... ஊறுகாய்... திருடிய வீட்டிலேயே பார்ட்டி செய்த திருட்டு கும்பல்


சரக்கு... ஊறுகாய்... திருடிய வீட்டிலேயே பார்ட்டி செய்த திருட்டு கும்பல்
x

நாகை அருகே திருடிய வீட்டிலேயே திருட்டு கும்பல் பார்ட்டி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகை,

நாகை அருகே வீடு ஒன்றில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல், நிதானமாக மது அருந்தியதோடு கொள்ளையடித்த வீட்டிலேயே ஊறுகாயை சைடிஷ் ஆக பயன்படுத்திய சம்பவம் போலீசாரை கிறுகிறுக்க வைத்துள்ளது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள ஆய்மழை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தன் குடும்பத்துடன் கடந்த 10-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் கோவில் திருவிழாவிற்கு சென்றார். இதனிடையே இவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 4 சவரன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வைர தோடு உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றனர்.

பின்னர் கொள்ளையடித்த வீட்டில் சாவகாசமாக மது அருந்திய கும்பல், ஃபிரிட்ஜில் இருந்த ஊறுகாயை சைடிஷ் ஆக தொட்டுக் கொண்டதும் தெரியவந்தது. வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.


Next Story