ஆதார் திருத்த பணிக்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம்


ஆதார் திருத்த பணிக்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2023 12:15 AM IST (Updated: 16 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் திருத்த பணிக்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் ஆதார் திருத்த பணிக்கு விண்ணப்பிக்க மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. இதனால் சிறப்பு முகாம்கள் நடத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது.

வரிசையில் காத்திருப்பு

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் மானியங்கள் பெறுவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கே.ஜி. வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக வங்கிகள், இ-சேவை மையங்கள் மற்றும் தபால் நிலையங்களில் ஆதார் கார்டு எடுத்தல், பெயர், முகவரி போன்ற திருத்தங்கள் செய்வதற்கு கூட்டம் அலைமோதுகிறது. பொள்ளாச்சி தலைமை தபால் நிலையத்தில் டோக்கன் வாங்குவதற்கு பொதுமக்கள் காலை 7.30 மணியில் இருந்தே வரிசையில் காத்திருக்கின்றனர்.

சிறப்பு முகாம்

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆதார் கார்டு எடுப்பதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். பொள்ளாச்சியில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் தினமும் டோக்கன் வாங்குவதற்கு காத்திருக்கின்றனர். முதலில் வரும் 25 நபர்களுக்கு தான் டோக்கன் வழங்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கிராமங்கள்தோறும் சிறப்பு முகாம்களை நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

1 More update

Next Story