ஏற்காடு மலைப்பாதையில் குறுக்கே விழுந்த ராட்சத மரம்
ஏற்காடு மலைப்பாதையில் குறுக்கே விழுந்த ராட்சத மரம்அகற்ற முடியாமல் அரசு ஊழியர்கள் தவித்துவருகின்றனர்
ஏற்காடு
ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து நேற்று மாலை 3.15 மணிக்கு ஏற்காட்டில் இருந்து நாகலூர் கிராமம் செல்லும் சாலையில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அருகில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. மரம் விழும் சமயத்தில் அந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மரம் மின்சார கம்பிகள் மீது விழுந்ததில் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சார துறையினர், வருவாய் துறையினர் மற்றும் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் பெரும் போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சுமார் 1½ மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு மாலை 4.45 மணிக்கு சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அப்புறப்படுத்தியதை தொடர்ந்து அந்த சாலையில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.