மீனவர் வலையில் சிக்கிய ராட்சத ஆமை


மீனவர் வலையில் சிக்கிய ராட்சத ஆமை
x

மீனவர் வலையில் சிக்கிய ராட்சத ஆமை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி கடல் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அரிய வகை கடல் வாழ் உயிரினங்களும், பெரிய வகை மீன்களும் மீனவர்கள் வலையில் சிக்குவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் கட்டுமாவடியை சேர்ந்த மீனவர்களான விஜய், செம்பியன் மகாதேவி பட்டினத்தை சேர்ந்த ரகு ஆகியோர் குறைவான ஆழத்தில் மீன் பிடிக்கப்படும் பட்டி வலையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களது வலையில் 15 கிலோ எடையுள்ள ராட்சத ஆமை சிக்கியது. இது அரிய வகையை சேர்ந்த கடல் ஆமை என்பதால் மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

1 More update

Related Tags :
Next Story