திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
x

திராவிட மாடலுக்கு பதிலாக நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்தார். பின்னர் கன்னியாகுமரியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு தூத்துக்குடியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள புறப்பட்டு வந்தார்.

வரும் வழியில் அவர் நெல்லை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

திராவிட மாடல் என்பதற்கு பதிலாக வேறு பெயரை பயன்படுத்திருக்க வேண்டும். திராவிட மாடல் என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது. மாடல் என்பது தமிழா?. திராவிட மாடலுக்கு பதிலாக முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மகன் நல்ல தமிழ் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story