பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு


பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு
x

சென்னை அண்ணாநகர் கிழக்கு பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை,

சென்னை அண்ணாநகர் கிழக்குப் பேருந்து பணிமனையில் எஸ்.இ.டிசி பேருந்துகள், உயர் ரக பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு, சர்வீஸ் செய்யப்பட்டு மற்ற பேருந்து நிலையங்களுக்கு அனுப்பப்படும். குறிப்பாக வெளி மாநிலங்களுக்கு செல்லக்கூடிய பேருந்துகள் இங்கிருந்து கோயம்பேடு, பாரிமுனை, தாம்பரம், திருவான்மியூர் போன்ற பேருந்து நிலையங்களுக்கு அனுப்பப்படும்.

அந்த வகையில் கோயம்பேட்டில் இருந்து மாலை 7 மணிக்கு பெங்களூரு செல்லவிருந்த ஏசி பேருந்து பணிமனையில் இருந்து கிளம்புவதற்கு தயாராக இருந்தது. அதற்காக பேருந்தை சுத்தம் செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தில் இருந்து புகை கிளம்பியது. அதைக் கண்ட பணியாளர்கள் உடனடியாக அங்கிருந்து தூரமாக சென்றனர்.

இந்த நிலையில் பேருந்து திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ பேருந்து முழுவதுமாக பரவி வானுயரத்திற்கு புகை சூழ்ந்தது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அண்ணாநகர் மற்றும் திருமங்கலம் தீயணைப்பு வீரர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story