அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்


அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 24 Jun 2023 12:15 AM IST (Updated: 24 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேந்தங்குடியில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

சேந்தங்குடியில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவசர சிகிச்சை

கூத்தாநல்லூர் அருகே உள்ளது சேந்தங்குடி கிராமம். இந்த கிராமத்தை சுற்றிலும் புத்தகரம், பொய்கைநல்லூர் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் நோய் வாய்பட்டாலோ அல்லது விபத்து ஏற்பட்டாலோ அவசர சிகிச்சை பெற நீண்ட தூரத்தில் உள்ள திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஊர்களில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அரசு ஆஸ்பத்திரி

அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை நீண்ட தூரத்தில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே பரிதாபமாக உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும், குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு வாகன பிரச்சினையால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சேந்தங்குடியில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேந்தங்குடியில் அரசு ஆஸ்பத்திரி அமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story